தமிழ்நாடு

கேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

rajakannan

கனமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள மக்களுக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற போதிலும், அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும், கேரள மக்களுக்கு உதவிட வேண்டும். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களை அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.