தமிழ்நாடு

திமுக வேட்பாளர்கள் பட்டியல் ‌3 நாட்களில் வெளியாகும் - மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் ‌3 நாட்களில் வெளியாகும் - மு.க.ஸ்டாலின்

webteam

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறித்த பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுக-பாஜக-பாமக கூட்டணி ஒரு புறத்திலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மறுபுறத்தில் களம் காணுகின்றன. நேற்றைய தினம் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார். அத்துடன், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்‌ நடைபெறாமல் தடுக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, உ‌ழவர் உழைப்பாளர் கட்சி, வல்லரசு பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 14 சிறிய கட்சிகளின் தலைவர்கள், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.