ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தேமுதிக சார்பில் வரும் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக இளைஞர்கள் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற ஏக்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என மத்திய அமைச்சரும், மாநில அமைச்சர்களும் தெரிவித்து வந்தாலும் மக்கள் சந்தேகத்துடனேயே இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 9ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.