முதல்வர் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் Pt web
தமிழ்நாடு

திமுக பலத்தைக் கூட்டும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக.?

திமுக கூட்டணியில் இணைவதற்காக, தமது பேரத்திலிருந்து தேமுதிக இறங்கிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவின் கூட்டணி கணக்கு என்ன என்பது குறித்து பெருஞ்செய்தி பகுதியில் காணலாம்..

PT WEB

ஆரம்பக்கட்டத்தில் தேமுதிக 20 தொகுதிகளை கேட்டு பேரம் பேசிவந்த நிலையில், தற்போது 10 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவந்த தேமுதிக, 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை கேட்டதாக தெரிகிறது. ஆனால், திமுக மற்றும் அதிமுக, இரண்டு கட்சிகளுமே 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் எனும் பேரத்துடன் நிறுத்திக்கொண்டதாக தெரிகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து, 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்ற அடிப்படையில் பேரத்தை தேமுதிக குறைத்துக்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், அதிமுக அதில் ஆர்வம் காட்டாத நிலையில், திமுக பேசி வருவதாக கூறப்படுகிறது. விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு தலா 6 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கும் நிலையில், புதிதாக கூட்டணிக்கு வரும் தேமுதிகவுக்கு 8 இடங்களை ஒதுக்கினால் கூட்டணியில் சங்கடம் ஏற்படக் கூடும் எனும் தயக்கம் திமுகவிடம் உள்ளது.

அதேசமயம், தேமுதிகவை உள்ளே கொண்டுவந்தால், கூட்டணி பலமடையும் என்று எண்ணுகிறார் முதல்வர் ஸ்டாலின். முக்கியமாக, தேமுதிகவை வெளியே விட்டுக்கொடுக்க திமுக விரும்பவில்லை. ஆகையால், 7 அல்லது 8 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடம் எனும் அளவில் பேரம் முடிக்கப்பட்டு, திமுக கூட்டணிக்குள் தேமுதிக இணையும் என்று சொல்லப்படுகிறது.