தேமுதிக மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவுக்கு கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும், மறைந்த தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், தமிழக அரசிடம் மணிமண்டபம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவுக்கே உள்ளது என்று தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் உட்படஅ னைத்து அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், மதரீதியான மோதல்களை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் விஜயகாந்த்துக்கு மணிமண்டபம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.