70வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வீடியோ மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிக கட்சி சார்ந்த பணிகளை அவரது மகன் விஜய பிரபாகரன் கவனித்து வருகிறார். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தொண்டர்களுடன் விஜயகாந்த் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாட்டின் 70வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அந்த வீடியோவில் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். லஞ்சமில்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மக்களோடு இணைந்து உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் வாழ்த்து வீடியோவை அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.