உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்களை கேட்டு அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்ந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இது கூட்டணி கட்சிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் பிரசாரம் அதிமுகவுக்கு பலமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்களை கேட்டு அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் உண்மையான விசுவாசிகளை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்றும், வெற்றி வாய்ப்புள்ளவர்களை அறிந்து இடம் கொடுக்க வேண்டும் எனவும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும் பொறுப்பாளர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த தெரிவித்ததாக கூறப்படுகிறது.