தமிழ்நாடு

விஜயகாந்துடன் படம் எடுக்க பணம் கொடுக்கும் தொண்டர்கள்

விஜயகாந்துடன் படம் எடுக்க பணம் கொடுக்கும் தொண்டர்கள்

webteam

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் பணம் செலுத்தி அவருடன் அக்கட்சித் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள தேமுதிக தொண்டர்களை விஜயகாந்த், நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணம் தொகையை செலுத்தி, டோக்கன் பெற்று தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் உங்களுடன் நான் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த்.