தமிழ்நாடு

தீபாவளிக்கு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அக்டோபர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என கூறினார். சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சுமார் 4,820 சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என அவர் கூறினார்.