தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

Rasus

தீபாவளி‌யை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் முன்பதிவின் மூலம் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

அதோடு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள்‌ இயக்கப்படும் முனை‌‌யங்களை இணைக்கும்‌ ‌வ‌கையில் இன்று முதல் 17-ஆம் தேதிவரை‌ சென்னையில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்‌படி அண்ணாநகர், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை ஆகிய இடங்களுக்கு மக்களுக்கு எளிதில் செல்ல வழிவகை செய்‌யப்பட்டுள்ளது.