திருச்சி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகை விற்பனை pt
தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி.. கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்! களைகட்டும் விற்பனை!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

PT WEB

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருச்சியில் உள்ள பெரியகடை வீதி, சின்ன கடை வீதி, தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு, நந்திக்கோவில் தெருஉள்ளிட்ட பகுதிகளில் தீபாவளிபண்டிகையையொட்டி விற்பனைகளைக்கட்டியுள்ளது. வீட்டு உபயோகப்பொருள்கள் மற்றும் புத்தாடைகள், பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று சீருடை காவலர்களும், சீருடை அல்லாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் மணிக்கூண்டு சுற்றியுள்ள பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன்கோயில் வீதி,ஆர்.கே.வி சாலை உள்ளிட்டபகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க குவிந்தனர். இங்குஉள்ளூர் மட்டுமின்றி நாமக்கல், சேலம்,கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கிசென்றனர்.

களை கட்டும் தீபாவளி கொண்டாட்டம்..

கர்நாடகாவில் பட்டாசு விற்பனைக்கு உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிறபகுதிகளில் இருந்து ஏராளமானோர்பட்டாசுகளை வாங்க ஓசூருக்கு படையெடுத்தனர். சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் குவிந்த மக்கள், பல்வேறு ரகபட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கிசென்றனர். இதன்காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி கடைவீதிகளிலும் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அங்குள்ள ஜவுளிக்கடைகளில் குடும்பம், குடும்பமாக புத்தாடைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிசென்றதால், அப்பகுதியே கூட்டம்நெரிசலுடன் காணப்பட்டது.

இதே போன்று, புதுச்சேரியில் ஏழைகளின் அங்காடி என அழைக்கப்படும் சண்டே மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகைக்காக பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சண்டே மார்க்கெட்டில் ஒரே தெருவில் பலவிதமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றை வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர்.