தீபாவளிக்கு அணியும் ஆடைகளின் அணிகலன்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெண்களே தேர்ந்தெடுத்து வடிவமைப்பது ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆடைகள் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் ஆடைகளுக்கு, ஏற்ற அணிகலன்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக தாங்கள் அணியும் ஆடைகள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற நிறத்தில் அணிகலன்களை தேர்வு செய்கின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலான அணிகலன்களை வாங்கக் கூடிய பெண்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொள்ளும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அணிகலன்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் இடம் பெறுவதால், அதனை பார்த்தே தங்களுக்கு தேவையான அணிகலன்களை பெண்கள் தாங்களே தயாரித்து அணிகின்றனர்.