டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பிளாஸ்டிக் கப்புகளை, டயர்களை பொது இடத்தில் கொட்டிவைக்கும் கடைகள் ஓட்டல்களுக்கு நோட்டிஸ் வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராமங்களில் சுகாதார பணிகள் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி கேட்டறிந்தார். அப்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கிராமங்களில் தூய்மை மாஸ்கேம்ப் நடத்த வேண்டும். பொதுமக்களை இணைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாக்கடை தூய்மை பணிகள், தண்ணீர் விநியோகிப்பாளர் பணிகளை தீவிர படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டீ கடைகள், ஓட்டல்கள், டயர் பஞ்சர் போடும் கடைகள் உள்ளிட்டவரை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத கடைகள், ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அவ்வாறு நோட்டீஸ் வழங்கிய பிறகும் சுகாதார சீர்கேட்டை கடை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அனைத்து பள்ளிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்களை நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் அவர் ஆலோனைகள் வழங்கினார்.