தமிழ்நாடு

ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா? - சைக்கிளில் சென்று ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்

ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா? - சைக்கிளில் சென்று ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்

JustinDurai

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் சென்ற ஆட்சியர், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அவர், முகக் கவசங்களை வழங்கினார். விதிகளை மீறியோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் காவல்துறையினரிடம் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு கேட்டறிந்தார்.