தமிழ்நாடு

பறவை காய்ச்சல் எதிரொலி: கோவை எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

JustinDurai
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோவையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையினர் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்கு காய்கறிகள், இறைச்சி, முட்டை செல்கின்றன. கேரளாவில் இருந்து திரும்பி வரும் இந்த வாகனங்களை சோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.