தமிழ்நாடு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 78.02 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

kaleelrahman

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 78.02 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 18-ஆம் தேதி வரை, 78.02 கோடிக்கும் அதிகமான (78,02,17,775) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

மேலும் 33 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை (33,08,560) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 6.02 கோடி (6,02,70,245) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.