Distraught due to their daughter love marriage 3 family members die by ends their life in Karnataka PT
தமிழ்நாடு

வீட்டை விட்டு வெளியேறி மூத்த மகள் காதல் திருமணம்.. பெற்றோர், தங்கை விபரீத முடிவு.. மைசூரில் சோகம்!

கர்நாடக மாநிலம் மைசூரில் மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரும், நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

PT WEB

மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே அணையின் நீர்த்தேக்க பகுதியில் பூதனுார் கிராமத்தில் இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதை அங்குள்ளவர்கள் பார்த்தனர். வாகனம் அருகில் மூன்று ஜோடி காலணிகள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக எச்.டி.கோட்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் கடிதம் இருந்ததை பார்த்தனர். கடிதத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மஹாதேவ சுவாமி (55), தன் மனைவி மஞ்சுளா (42), மகள் ஹர்ஷிதா (16) ஆகியோருடன் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தது.

மஹாதேவசுவாமி, மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் அர்பிதா (20) சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வேதனை அடைந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து தீ அணைப்பு துறையினரும் விரைந்து வந்து நீர்தேக்கத்தில் சடலத்தை தேடினர் அப்போது மூன்று பேரும் இடுப்பில் கயிர் கட்டிக்கொண்டு நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், மூன்று பேரில் சடலங்கள் ஒரே இடத்தில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து எச்.டி.கோட்டே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.