தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்: மக்கள் கோரிக்கை

Veeramani

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவுக்கருவிகள், பானைகள், பானைஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பார்வையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் வந்து அகழாய்வு தளங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

அகழாய்வு தளங்களில் பானைகள், பானைஓடுகள், உறைகிணறுகள் உள்ளிட்டவைகள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. வெள்ளி நாணயம் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.