தமிழ்நாடு

சென்னையில் காணாமல் போன நீர்நிலைகள்

சென்னையில் காணாமல் போன நீர்நிலைகள்

webteam

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பல நீர்நிலைகள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்ட நிலையில், தண்ணீருடன் இருக்கும் ஏரி, குளங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சதுப்பு நிலக்காடுகளும், நீர்நிலைகளும் சூழ்ந்திருந்த சென்னை தற்போது வறண்டு காணப்படுகிறது. இதற்கு அரசின் அலட்சியத்தன்மையும், மனிதர்களின் பராமரிப்பின்மையும்தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. பல நூறு நீர்நிலைகள் கொண்ட சென்னையில் தற்போது குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவி வருகிறது.