தமிழ்நாடு

இயக்குநர் ஆர். என். ஆர் மனோகர் மறைவு - முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல்

kaleelrahman

திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். என். ஆர். மனோகர் கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆர்.என்.ஆர்.மனோகர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

திமுக எம்பி, என்.ஆர்.இளங்கோவின் சகோதரரான மனோகரின் மறைவுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், எம்பி,கனிமொழி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தலைமைக் கழகச் சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ எம்.பி.,-யின் சகோதரர் ஆர்.என்.ஆர். மனோகர்  மறைந்தார் என்ற வேதனைமிகுந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். நடிகராகவும், இயக்குநராகவும் அறியப்பட்ட மனோகரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.