மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை pt desk
தமிழ்நாடு

ஒசூர்: மார்கழியில் மக்களிசை – மேடையிலேயே நடனமாடிய இயக்குனர் பா.ரஞ்சித்

webteam

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் பா.ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி, காலா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களையும் இயக்கினார். இதனிடையே, நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார்.

Dance

இந்நிலையில், ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ஆம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி (நேற்று முன்தினம்) தொடங்கினார்.

இதைத்தொடாந்து நேற்று இரண்டாவது நிகழ்வாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கேற்ற இந்த நிகழ்வு பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் வரும் 28 முதல் 30 வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

Dance

ஒசூரிில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியில் வாழும் சிலரின் வட்டார மொழியிலான பாடல், பாரம்பரிய இசை ஆகியவை இசைக்கப்பட்டன. முன்மொழி பேசக் கூடியவர்கள் உள்ள ஒசூரில் எதிர்ப்பார்த்ததை விட மக்களின் ஆதரவு இருந்ததாக ரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதையடுத்து மேடையிலேயே சக கலைஞர்களுடன் இயக்குனர் பா.ரஞ்சித் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது