இயக்குநர் லிங்குசாமி சுவாமி தரிசனம் pt desk
தமிழ்நாடு

சோளிங்கர் | ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் இயக்குநர் லிங்குசாமி சுவாமி தரிசனம்

சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கும்கி 2 படத்தின் ஹீரோ மதியழகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்

PT WEB

செய்தியாளர்: நாராயணசாமி

அஞ்சான், சண்டக்கோழி, ரன், ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு மெகா ஹிட் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் கும்கி 2 திரைப்படத்தின் கதாநாயகன் மதியழகன் ஆகியோர் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் முக்கிய திருத்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலுக்கு ரோப்காரில் வந்தனர்.

இதையடுத்து அங்கு லிங்குசாமி உள்ளிட்டோர் மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் என்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.