தமிழ்நாடு

சந்தியாவை கொடூரமாக கொன்றது எப்படி ? வாக்குமூலம் கொடுத்த கணவர்

சந்தியாவை கொடூரமாக கொன்றது எப்படி ? வாக்குமூலம் கொடுத்த கணவர்

Rasus

மனைவி சந்தியாவை கொடூரமாக கொன்றது எப்படி என கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நெஞ்சை பதற வைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளை கிளரும் போது பிளாஸ்டிக் கோணி பையில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன. கொலை செய்யப்பட்ட நபர் யார்..? குற்றவாளி யார்..? என்பது குறித்த அறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனாலும் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 நாட்களாக துப்புக் கிடைக்காமல் போலீஸ் திணறினர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் தனது மனைவி சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதேசமயம் அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அத்துடன், தான் ஒரு கொலையைச் செய்துவிட்டோம்‌ என்ற எந்த அச்சமும் இன்றி, காவல்துறையினரை வெகு சாதாரணமாக கையாண்டிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

17 ஆண்டுகால திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகர‌த்துகோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்க, இருவரு‌ம் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த சந்தியா, ஹாஸ்டலில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பாலகிருஷ்ணன் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சந்தியாவை, ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

கொலை செய்தது எப்படி..?

என்னதான் சண்டைபோட்டாலும் தனது கணவர் தானே என நம்பிய சந்தியா, அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்குச் சென்றுள்ளார். 19-ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதி‌ளித்த பா‌லகிருஷ்ணன், தன்னோடு சேர்ந்து‌ வாழவேண்டுமென அன்புக் கட்டளையிட்டுள்ளார்.‌ அதனை ஏற்க மறுத்த சந்தியா, வீட்டை விட்டு வெளியேற முயற்சித்திருக்கிறார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு‌ சென்ற பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த சுத்தியலால், சந்தியாவின் தலையில் ஓங்கி‌ அடித்துள்ளார். துடிதுடித்த கிழே சாய்ந்த சந்தியாவின்‌ இறுதி மூச்சு அங்கேயே அடங்கிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாததால், 19-ஆம் தேதி முழுவதும் சடலத்துடனேயே இர‌வைக் கழித்திருக்கிறார் பாலகிருஷ்ணன். 20-ஆம் தேதி பொழுது விடிந்தது. கொலையை எப்‌படி மறைக்கலாம் என மாஸ்டர் ப்ளான் ஒன்றை தயார் செய்திருக்கிறார்‌ அவர். அதன்படி‌, டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுவாங்கி அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். போதையி‌ன் உச்சத்தில், சந்தியாவின் சடலத்தை கழி‌‌வறைக்கு இழுத்துச் சென்று பாலகிருஷ்ணன், தலை, கைகள்,‌ கால்கள் மற்றும் உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி கூறு போட்டிருக்கிறார்.

சடலத்தை ஒரே இடத்தில் வீசினால் அடையாளம் தெரிந்துவிடும் என்பதற்காக, அதனை 3 பகுதிகளாக பிரித்துள்ளார். வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை வெவ்வேறு சாக்குப்பைகளில் கட்டி, அதனை வீட்டின் ‌அருகேயே உள்ள குப்பை தொட்டிகளில், அடையாறு ஆற்றங்கரையோரமும் வீசியுள்ளார்.‌ இந்நிலையில், ஜனவரி‌ 21-ஆம்‌தேதி‌ ‌பெருங்குடி குப்பை கிடங்கில் கை,கால்கள் கண்டெடுக்கப்பட்டதால் கொலை சம்பவம்‌ குறித்த தகவல் வெளியு‌லகிற்கு தெரியவந்ததாக கூறுகிறது காவல்துறை.

தன்மீது‌ சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சந்தியாவை காணவில்லை என புகார் செய்த‌ பாலகிருஷ்ணன், தாமாக வந்து வலையில் சிக்கினார் என்கிறார்கள் தனிப்படை காவலர்கள். தான் இயக்கிய திரைப்‌படத்தில், ரசிகர்களுக்கு காதலை இலவசமாக கொடுத்த இந்த இயக்குநர், தன் மனைவியை கொஞ்சம்‌‌ காதலித்திருந்தால், இதுபோன்றதொரு விபரீதம் நிகழ்ந்திருக்காது.