தமிழ்நாடு

காகித அட்டை ஆலையில் தீ விபத்து: பலகோடி மதிப்பிலான பொருட்கள் சாம்பல்

காகித அட்டை ஆலையில் தீ விபத்து: பலகோடி மதிப்பிலான பொருட்கள் சாம்பல்

webteam

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காகித அட்டை ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

விட்டல்நாயக்கன்பட்டியில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான காகித அட்டை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து இன்று ஆலை திறக்கப்பட இருந்த நிலையில், அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆலையின் காவலாளி அளித்த தகவலின்பேரில், ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், மூலப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகின.