தமிழ்நாடு

3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம்: 7 பேர் கைது

3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம்: 7 பேர் கைது

webteam

திண்டுக்கலில் மூன்று‌ துப்புரவுப் பணியாளர்கள் வெட்டி படுகொலை செய்ய‌ப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பாலமுருகன் என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார். இதே போல் சௌராஷ்டிராபுரத்தில் சரவணனை என்பவரையும், ரயில் நிலையம் அருகே துப்புரவு பணியிலிருந்த வீரன் என்பவரையும் அதே கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை தொடர்பாக ஆரோக்கியசாமி, யோகராஜ், வினோத் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக மேலும் 5 பேரை ‌காவல்துறையினர் தேடி வருகின்றனர்.