திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த நிகழ்வு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் போது சிலர் செல்போனில் விளையாடியும், வீடியோ பார்த்தும், பேசியபடியும் இருந்தனர். டெங்குவால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சியத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.