நீதிபதி குறித்து விமர்சித்து கருத்துப் பதிவிட்ட திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துகளை விமர்சித்து திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாணார்பட்டி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.