chicken theft
chicken theft pt
தமிழ்நாடு

அதிகாலையில் கைவரிசை காட்டும் மர்ம நபர்.. கட்டைப் பை கோழி திருடனை தேடும் போலீஸ்

யுவபுருஷ்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மார்க்கெட் வீதியில் அலாவுதீன் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். விற்பனைக்காக கோழிப் பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகளை, நாள்தோறும் அதிகாலையில் கடை முன் இறக்கி வைப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. ஆனால், அப்படி இறக்கி வைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த நபர், கடையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில், தொடர்ச்சியாக அதிகாலை கட்டைப்பையுடன் வரும் ஆசாமி ஒருவர், இறக்கி வைக்கப்பட்டிருந்த கோழி கூண்டிலிருந்து கோழிகளை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக தான் கொண்டு வரும், கட்டப் பை முழுவதும் கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

மளிகை கடையில் சரக்கு வாங்குவதுபோல, கோழிகளை கட்டப்பையில் அபேஸ் செய்து வந்த மர்ம ஆசாமி குறித்து உரிமையாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். வீடியோவும் வைரலான நிலையில், வத்தலகுண்டு போலீசார் கட்டைப் பை கோழி திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.