தமிழ்நாடு

திண்டுக்கல்: டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞரை பட்டபகலில் வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்

திண்டுக்கல்: டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞரை பட்டபகலில் வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்

kaleelrahman

வத்தலக்குண்டு பேக்கரியில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வத்தலக்குண்டு - உசிலம்பட்டி பிரிவில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், சாமி துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு போலீசார், சாமிதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாமிதுரையின் உறவினர்கள் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.