செய்தியாளர்: காளிராஜன் த
புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செயல்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புருலியா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி 20 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி வந்தடையும்.
இந்நிலையில், இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடக்கும் போது, திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமிக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் படி புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில் நிலைய காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அப்போது 8 கிலோ கஞ்சா ரயிலில் கேட்பாரற்று இருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக கஞ்சா இருந்தா பையை கைப்பற்றிய ரயில் நிலைய காவல்துறையினர். கஞ்சா எங்கு இருந்து ரயிலில் ஏற்றப்பட்டது என்பது குறித்து மற்ற ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய உள்ளனர். மொத்தமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 30 கிலோக்கு மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.