ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆர்.கே.நகரில் தொப்பி அணிந்த சிலர் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டதில் கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.