தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்துள்ளதாக கூறி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.