இந்தியாவில் முதல் முறையாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தாளில்லா மின்னனு தேர்வு கணிப்பலகை (DIGITAL EXAM PAD) அறிமுகம்.
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்ளிலும் மாணவர்கள் தாளில் தேர்வு எழுதும் முறைதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையில் கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு மாணவர்கள் விடைத்தாளில் விடை எழுதி அதனை தேர்வர்கள் மதிப்பீடு செய்யும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் உள்ள குறைபாடுகளை முற்றிலும் அகற்றி, மிகவும் பாதுகாப்பான தாளில்லாத கணிணித் திரையால் எழுதும் “தேர்வு கணிப்பலகை” முறை, இந்தியாவில் முதல் முறையாக கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைமுறைபடுத்தப்படுத்தப் படுகிறது. இதனைப் பற்றி, பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர், முனைவர் இளமுருகு கூறுகையில், இந்த முறையில் காகிதப் பயன்பாடு முற்றிலும் இல்லாததால், கேள்வித்தாள் அச்சடித்து பாதுக்காப்பாக அனுப்புதல், மதிப்பீடு செய்தல் ஆகியவை எளிதிலும், சீக்கிரமாகவும் முடிக்க முடிகிறது.
இந்த முறை பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு பரீட்சார்ந்த முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்த 2018 கல்வியாண்டு முதல், பல்கலைக் கழக உறுப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டிலுள்ள 42 வேளாண்மைக் கல்லூரிகளில், முற்றிலுமாக நடைமுறைக்கு வருகின்றது. இந்த“தேர்வு கணிப்பலகை” முறையில் மாணவர்களின் கைரேகை, புகைப்படம் ஆகியவை முதலிலேயே பதிவு செய்யபட்டு அதன் அடிப்படையில் தான் மின்னனுத் திரையில் தேர்வின் போது கேள்வித்தாள் வரும், அதனை அதற்கென உள்ள பேனா (ஸ்டைலஸ்) மூலம் தான் மாணவர்கள் விடையெழுத முடியும். இந்த முறையில் விடையெழுதும் முறை பற்றி மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்பே பயிற்சியும் அளிக்கப்படுக்கிறது.
தேர்வு தொடங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவை, குறிப்பிட்ட நேரத்தில் செயல்படும் விதத்தில் ‘தேர்வு கணிப்பலகை” வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் தேர்வர்கள் அவர்களது கணிணித் திரையிலிருந்து, விடையினை மதிப்பீடு செய்துகொள்ளலாம். மேலும், முனைவர் கு. இராமசாமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகையில் காகிதமில்லா தேர்வு கணிப்பலகை முறையின் மூலம், காகித பயன்பாடு, ஆள் மாறாட்டம், எளிதிலும், விரைவிலும் மதிப்பீடு செய்தல், இதன் மூலம் மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவினை அறிவித்தல் ஆகியவை சாத்தியமாகும். மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மின்னனுத் திரையில் தங்கள் விடைத் தாள்களையும் பார்க்க இந்தத் தேர்வு கணிப்பலகையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு , இந்ததேர்வு கணிப்பலகை முறை ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்று விளக்கினார்.