தமிழ்நாடு

மாநில சுயாட்சியை அடகுவைத்த ADMKவை மக்கள் ஏற்கவில்லை.! - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

மாநில சுயாட்சியை அடகுவைத்த ADMKவை மக்கள் ஏற்கவில்லை.! - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, நேற்று பிப்ரவரி 22-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘நகர்ப்புற உள்ளாட்சி... திமுக தொடர் வெற்றி எப்படி? அதிமுக தொடர் தோல்வி ஏன்?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே...

பெரியார் - நினைவும்

பெரியார் - மறப்பும்

இது பலமாக இருக்கிறது

அது பலவீனமாக உடைந்து கிடக்கிறது

அவ்வளவு தான் சார்.

ஆளுங்கட்சி அதிகமான பணம் தருகிறது எதிர்க்கட்சி கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து செலவு செய்ய தயங்குகிறது அவ்வளவுதான் வித்தியாசம்

ஒரு ஆளுமை இழந்து அடுத்த ஆளுமை உருவாக தான் இந்த தோல்வி அடுத்த ஒரு முறை வெற்றி பெற்றால் அதிமுக அடுத்த அசைக்க முடியாத சக்தியாக மாறும் வாரிசு தலைமை இல்லாமல் இருக்கும்

தமிழகமே திமுகவின் கோட்டை ன்னு ஆயிருச்சு ....முதல்வர் ஸ்டாலின் யாரையாவது , எந்த கட்சியையாவது சீண்டுகிறாரா ?? வம்பிழுக்கிறாரா ?? கிடையாது ....ஒரு அரசு அலுவலரை போல் காலை 9 மணிக்கு தன்னுடைய பணிகளை துவங்கி விடுகிறார் ...சைலேந்திரபாபு , இறையன்பு ...ரெண்டு பேருக்கும் பதவி கொடுத்தப்பவே இது ஒரு மாற்று அரசியல் னு சொல்லாம சொல்லிட்டாரு ..சின்சியர் ஸ்டூடன்ட் ராதாகிருஷ்ணனை மருத்துவ செயலர் பதவியிலிருந்து மாற்றவில்லை ....அதை நீதிமன்றமே பாராட்டுச்சு ....மா சு ...மருத்துவமே படிக்காம மருத்துவ துறையை கையாண்டு ...லாக் டவுன் பிரச்சினை வராம கொரோனாவை எதிர்த்த ஒரு உதாரண அமைச்சர் ...பல ஆயிரம் கோவில் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதே சேகர் பாபு ஒரு செயல் அமைச்சர் ன்னு காட்டிடுச்சு ....மேற்கு மாவட்ட கட்சி ன்னு இருந்த அடையாளமும் இப்ப அதிமுக வுக்கு இல்லாம போச்சு ....எனக்கென்னவோ ஸ்டாலின் இப்ப எம் ஜி ஆர் மாதிரி மக்கள் திலகமா ஆயிட்டார் ன்னு தோணுது ....வாழ்த்துக்கள் ...அரசு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாடு முழுக்க கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு செலவளித்திருந்தாலேயே அதிமுக பாதிக்கு பாதி ஜெயிச்சிருக்குமே ...?? அதிமுக தன்னை புதுப்பித்துக்கொள்ளும் காலம் வந்திருச்சு ...எம் ஜி ஆர் என்னும் மக்கள் திலகம் உருவாக்கிய கட்சி இப்ப மக்களின் மனங்களை விட்டு தூரமா போயிருச்சு ....அடாவடி பேச்சு , கிண்டல் பேச்சு , சொந்த கட்சிக்காரனையே அடிப்பது போன்று நடந்தால் தொண்டர்கள் பாடம் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்

மாநில சுயாட்சியை அடகு வைத்த admk வை மக்கள் ஏற்கவில்லை.

#அதிமுக தோல்வியடைந்த தேர்தல்கள்...

2004 நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வி,

2006 சட்டமன்ற தேர்தல் தோல்வி,

2006 உள்ளாட்சி தேர்தல் தோல்வி,

2009 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி,

2010 பென்னாகரம் இடைத்தேர்தல் 3ம் இடம் தான் அதிமுக-விற்கு கிடைத்தது.

ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தல் மாபெரும் வெற்றி

தோல்வியை கண்டு தொண்டர்கள் சோர்ந்துவிட வேண்டாம்,

மீண்டும் அதிமுக எனும் மக்கள் இயக்கம் மாபெரும் வெற்றி பெறும்