தமிழ்நாடு

ஆளுநர் முடிவு தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது! - #LikeDislike

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 27-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கூட்டாட்சிக்கு எதிரான செயல்பாடு என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம்... ஆளுநரின் அணுகுமுறையில் மாற்றம் வருமா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

மாற்றம் வரனும். அரசின் முடிவுகளுக்கு சம்மதம் கூறாமல்,மத்திய அரசுக்கு அனுப்பாதது தவறெனத் தெரிந்தும்,அதைத் தொடர்வதற்கு நீதி மன்றமே கண்டனம் கூறி,மாற்றம் ஒன்று ஏற்பட,அரசின் முடிவுக்கு வலு சேர்த்து உள்ளது முதல் வெற்றி. அரசு ஓரடி எடுக்க,சரி என அடுத்த அடியை ஸ்ட்ராங்காக வைத்து உள்ளது. எந்த விஷயமும் வெற்றி பெற இருபுறமும் ஒத்துழைப்பு தேவை. அரசின் திட்டங்களில் தலையிடாமல், எதிர்ப்பு காட்டாமல், ஏற்றுக் கொள்ளும்போது,எதுவும் தடையின்றி நடந்தால் தானே மாநில வளர்ச்சிக்கு உதவும்?நம்பிக்கைக் கீற்றின் ஒளி சற்றே தெரிகிறது. ஆண்டவன் ஒரு கதவை மூடினால் நூறு கதவுகளைத் திறப்பார்.

ஆளுநரின் அணுகுமுறையில் மாற்றம் தேவையில்லை. அவர் எடுக்கும் முடிவு தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடாது. உச்சநீதிமன்றமா மக்கள் உயிரை காப்பாற்ற போகிறது. காவல்துறையும் , இராணுவமும் தான். பேரறிவாளனை விடுதலை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருப்பது காஷ்மீர் தீவிரவாதிகள் , கோவை குண்டு வெடிப்பு சக்திகள்தான். பேரறிவாளனை ராஜீவ் கொலை வழக்கிலிருந்து குற்றமற்றவர் என நிரூபித்தால் அவர் விடுதலை சாத்தியம்தான். தமிழக அரசால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் பங்கு இல்லை என நிரூபிக்க இயலும். தமிழக காவல்துறையால் முடியாததது ஒன்றுமில்லை. ஆளுநர் , குடியரசுத்தலைவர் காலத்தை விரயம் செய்யாமல் வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுவிக்க தேவையான ஆதாரத்தை திரட்ட வேண்டும்.

அமைச்சரவை முடிவெடுக்கலாம், ஆளுநர் முடிவெடுக்கலாம், அரசு முடிவெடுக்கலாம்னு சொல்லுற உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்றமே யாரையும் கேட்காமல் ஏழுவரை விடுவிக்கலாமே...அவங்களுக்கு அதிகாரம் இருக்கா, இவங்களுக்கு இருக்கா என்று கேள்வி கேட்பதை விடுத்து உச்சநீதிமன்றத்திற்கு இல்லாத அதிகாரமா அரசுக்கும், அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் இருக்கிறது? தவறை உச்சநீதிமன்றமே செய்கிறது. இதை வைத்து திமுக மிக பெரிய அரசியல் லாபம் அடைவர். தனது கையாலாகாத தனத்தை ஆளுநர் மீதும், மத்திய அரசு மீதும் போட்டுவிட்டு காலத்தை ஓட்டிவிடுவார். இது மிகப பெரிய ஆபத்து.

எத்தனை நீதிமன்ற தீர்ப்புகளில் எத்தனை அரசு நிறைவேற்றியிருக்கிறது? எத்தனை கோப்பு கூடத்திறக்கப்படாமல் தூங்குகிறது? இதற்கு ஏதாவது ரிப்போர்ட்டோ, டேஷ்போர்டோ இருக்கா?

உச்ச நீதிமன்றத்தின் வேலை கருத்து சொல்ரதில்ல, தீர்ப்பு சொல்லணும்.

வரும் வர வைப்போம்