குறுந்தொழில் முனைவோர்
குறுந்தொழில் முனைவோர் PT
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு: குறுந்தொழில்முனைவோரின் சிரமங்கள் என்ன?

webteam

கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். 20 ஆண்டுகளுக்கும் மேல் குறுந்தொழில் முனைவோராக உள்ளார். 6 இயந்திரங்கள் வைத்து 4 பணியாளர்களுடன் வாடகை கட்டடத்தில் தொழிலை நடத்தி வந்தவர், மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால், வாடகை செலுத்த முடியாமல், இயந்திரங்களை விற்று, தனது சொந்த வீட்டிலேயே 2 இயந்திரங்களுடன் தொழிலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

மின் கட்டணம் செலுத்தவே தனியாக உழைக்க வேண்டிய கட்டாயம்!

இந்நிலையில், கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், ஜாப் -ஆர்டர்களை நஷ்டத்திற்கு செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். இதனால், மின் கட்டணத்திற்காகவே தனியாக சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார் விஸ்வநாதன்.

கணவர் விஸ்வநாதனுடன் தொழிலை செய்து வரும் விஜயா பொருளாதார பாதிப்பு சமையல் முதல் பெண்ணின் திருமணம் வரை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்காதவரை தங்கள் தொழிலில் அடுத்த அடியை எடுத்துவைப்பதென்பது இயலாத ஒன்று என்று கூறும் விஸ்வநாதன், தங்களுக்கு வரும் ஆர்டர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றுவிடுவது பற்றியும் கவலை தெரிவிக்கிறார்.