தமிழ்நாடு

மாற்றுத் திறனாளி பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை!

மாற்றுத் திறனாளி பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை!

webteam

வாயில் துணியை அமுக்கி மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி (காது கேளாத வாய் பேசமுடியாத) பெண், முத்துலெட்சுமி (35). பெற்றோர் இல்லாத இவர், சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர், முத்துலெட்சுமியின் வாயில் துணியை அமுக்கி, முட்புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. 

இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இப்பிரச்சினையை கையிலெடுத்த பின்னர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. பாதிக்கபட்ட பெண் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.