தமிழ்நாடு

ஒரு கூட்டிற்குள் இரண்டு தேங்காய்: மக்கள் வியப்புடன் கண்டு ரசிப்பு

ஒரு கூட்டிற்குள் இரண்டு தேங்காய்: மக்கள் வியப்புடன் கண்டு ரசிப்பு

Rasus

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் சமைப்பதற்காக தேங்காய் கூட்‌டை உடைத்தபோது, உள்ளே இரண்டு தேங்காய்கள் இருந்தன. இத்தேங்காயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

கோவை சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது தோட்டத்திலிருந்து வந்த தேங்காய் ஒன்றை வீட்டில் சமைப்பதற்காக எடுத்து உடைத்தபோது, அதன் உள்ளே இரு தேங்காய்கள் இரு பிரிவுகளாக இருந்ததை பார்த்து குடும்பத்தினர் வியப்படைந்தனர். இதற்கு முன்பு இதுபோல் ஒரே தேங்காய்க்குள் இரு பிரிவுகளாக தேங்காய் இருந்ததை பார்த்ததில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறியதை அடுத்து, அதனை அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் பார்ப்பதற்காக அளிக்கவுள்ளதாக பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.