கிரிக்கெட் வீரர் தோனியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோனியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ”சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியரும் ,நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தோனி உடன் கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.