தமிழ்நாடு

‘சாமான்ய மக்களும் நாடாளுமன்றம் செல்லலாம்’ - உதவும் தருமபுரி எம்பி 

‘சாமான்ய மக்களும் நாடாளுமன்றம் செல்லலாம்’ - உதவும் தருமபுரி எம்பி 

webteam

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13 வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரை நாடாளுமன்ற விருந்தினர் அரங்கில் இருந்து பார்வையிட தருமபுரி எம்பி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரை விருந்தினர் அரங்கில் இருந்து பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு எம்பியும் தன்னுடைய சார்பில்  நாடாளுமன்றத்திற்குள் செல்வதற்கான சில நுழைவுச் சீட்டுகளை வழங்கலாம். இதன் படி நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண விரும்புவோர் எம்பி ஒருவர் உதவியுடன் நாடாளுமன்ற விருந்தினர் அரங்குக்கு செல்லலாம். 

இந்த முறையில் டிசம்பர் 13 வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரை நாடாளுமன்ற விருந்தினர் அரங்கில் இருந்து பார்வையிட தருமபுரி எம்பி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தருமபுரி எம்பி செந்தில்குமார், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றத்தை பார்க்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விருந்தினர் அரங்கில் இருந்து பார்க்க விருப்பப்பட்டால், விருந்தினருக்கான நுழைவுக்கு நான் உதவி செய்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்புகொண்ட காஷ்மீரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நாடாளுமன்றத்தைச் சென்று பார்வையிட எம்பி செந்தில்குமார் உதவியுள்ளார். அந்த இளைஞர்கள் எம்பி செந்தில்குமாருக்கு தங்களுடைய ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர். குளிர்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் 13 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.