தமிழ்நாடு

தினகரன், அமைச்சர் ஆதரவாளர்கள் திடீர் மோதல்

தினகரன், அமைச்சர் ஆதரவாளர்கள் திடீர் மோதல்

webteam

திருச்சியில்‌ அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களுக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை சறுக்குப் பாதையில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான ராஜராஜசோழன் சில பேருடன் வந்து வெல்லமண்டி நடராஜனிடம் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அமைச்சர் நடராஜன் பதவி விலக கோரியும், மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய கோரியும் அவர்கள் திடீரென முழக்கமிட்டனர். இதனால் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறும், கைகலப்பும் ஏற்பட்டது. பின்னர் முழக்கமிட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.