தமிழ்நாடு

இது புதுசா இருக்கே! - ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து சூரிய கிரகணத்தை பார்த்த கிராம மக்கள்

webteam
தருமபுரியில் சூரிய கிரகணத்தை கிராம மக்கள் ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து பார்த்து ரசித்தனர். 
சூரிய கிரகணம் இன்று தமிழகத்தில் 4 மணி 14 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 4.44 மணிக்கு முடியுற்றது. இதனை பல்வேறு இடங்களில் தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பாரத்து வந்தனர். ஆனால் கிராம புறங்களில் உள்ளவர்கள் வெரும் கண்களால் பார்க்க முடியாது என்பதால், சூரிய கிரகணத்தை கிராமத்தில் உள்ளவர்கள் ஆட்டு(உரல்) கல்லில் உலக்கையை வைத்தால் உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும். இது கிரகணத்தின் போது மட்டும் தான் ஆட்டுக்கல்லில் உலக்கை நேராக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு தானாகவே ஆட்டுக்கல்லில் வைக்கப்பட்டுள்ள உலக்கை கீழே விழுந்து விடும். 
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சூரிய கிரகணத்தின் போது மக்கள் வெண்கல தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க வைத்து பார்ப்பார்கள். இந்த நிலையில் தருமபுரி அடுத்த, இலக்கியம்பட்டி,  அன்னசாகரம் பகுதியில் உள்ள சிறுவர்கள், கிரகணத்தின் போது உலக்கையை ஆட்டுக்களில் வைத்தனர். அப்போது உலக்கை நேராக நின்றது. அப்பொழுது கிரகணம் தோன்றியதாக உறுதிப்படுத்தினர். மேலும் சூரிய கிரகணம் முடிந்தவுடன் தானகவே உலக்கை கீழே விழுந்து விட்டது. இவ்வாறு இன்றைய சூரிய கிரகணத்தை  சிறுவர்கள் மற்றும் அபபகுதி பொது மக்களும் உலக்கை ஆட்டுக்கல்லில் நேராக நிற்பதை பார்த்து ரசித்தனர்.