செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் பொம்மிடி வடந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்பர் (27) - தஸ்லீம் பானு தம்பதியர்கள். இவர்களுக்கு ஆத்தீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், தஸ்லீம் பானு மஞ்சவாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஸ்லீம் பானுவை பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து அக்பர், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தஸ்லீம் பானு தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தை ரத்தக் காயங்களுடனும் இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அக்பர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர்இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீடு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால், குழந்தை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.