சதுரங்கப்போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி வேண்டி தருமபுரி எம்பி செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ட்விட் செய்துள்ள எம்பி செந்தில்குமார், “கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி சதுரங்க போட்டியில் சிறந்து விளங்குகிறார். அவர் சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் வெல்லும் முனைப்பில் உள்ளார். போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவரால் வெளிநாடுகளுக்கு போகமுடியவில்லை. அதனால் அடுத்த 6 மாதத்துக்கான வெளிநாட்டு பயண செலவுக்காக ரூ.6 லட்சம் தேவைப்படுகிறது.
அதனால் 300 பேர் தலா ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உதவியாக இருக்கும். அனைவருக்கும் உதவும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்பதால் ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக யாரும் கொடுக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பணம் கொடுக்க விரும்புபவர்கள் தங்களது இமெயில் முகரியை அவருக்கு ட்வீட் செய்தால், பணம் செலுத்த வேண்டிய வங்கி எண் விவரத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ‘பணம் அனுப்பிய பிறகு, அதற்கான ரசீதின் புகைப்படத்தை அனுப்பியதும் அவர்கள் ஸ்பான்சர்ஸ் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என்றும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கவனத்திற்கு:-
Bank Details:
Name : K.Priyanka & K.Maruthambal
Acc no : 20222762661
Branch : Vadavalli SBI
IFSC Code : SBIN0005740
Bank : State Bank Of India