உலக சிலம்பம் போட்டிக்கு தேர்வாகியும் செல்ல முடியாமல் தவிக்கும் கோவை இளைஞர் கார்த்திக்கிற்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் ரூ.6,000 நிதி உதவி அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த மாணவர் கார்த்திக். பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். செலவுகளுக்கான பகுதி நேரமாக வேலைக்கும் சென்று வருகிறார். மாணவர் கார்த்திக்கின் பெற்றோர் கூலி வேலைதான் செய்து வருகின்றனர். சிலம்பத்தில் அதிகம் ஆர்வம் உள்ள கார்த்திக் தேசிய போட்டிகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.
தெற்காசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற கார்த்திக் அக்டோபர் 3-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலக சிலம்பம் போட்டிக்கு தேர்வாகியும் ரூ.55,000 பணம் இல்லாததால் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார். இது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக அவருக்கு உதவிகள் கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவை மாணவர் கார்த்திக்கிற்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் ரூ.6,000 நிதியுதவி அளித்துள்ளார்.
நீங்கள் நினைத்தாலும் கார்த்திக்கிற்கு உதவிக்கரம் நீட்டலாமே..!
Account Holder: M Karthick
Bank: Indian Overseas
Account Number: 174701000010442
IFSC: IOBA0001747