தமிழ்நாடு

“கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல” - நக்கல் செய்தவருக்கு தருமபுரி எம்.பி பதில்

“கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல” - நக்கல் செய்தவருக்கு தருமபுரி எம்.பி பதில்

Rasus

கழிவறையை சுத்தம் செய்வது கேவலமான செயல் அல்ல என்றும்.. எந்த இடத்தில் பிரச்னை என்று சொல்லுங்கள்.. நானே வந்து சரிசெய்து தருகிறேன் என தருமபுரி எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தருமபுரி எம்.பி செந்தில்குமார். ட்விட்டரில் ஆக்டிவாக செயல்படக் கூடியவர். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதாவது மொரப்பூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் தெரு விளக்கு பிரச்னை தொடர்பாக புகார் வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து அது சரிசெய்து கொடுக்கப்பட்டதகாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கான பின்னூட்டத்தில் பழனி என்பவர், ‘பாத்ரூம் அடைச்சிருக்கு. வந்து சுத்தம் செய்து தருகிறீர்களா’ என பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “இதில் என்ன இருக்கு... எங்கே என்று சொல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான்.” எனப் பதில் அளித்துள்ளார்.

இதனிடையே பழனி என்பவர் வம்பு இழக்கும் வகையிலேயே அந்தக் கேள்வியை எழுப்பியிருப்பது போன்று உள்ளது, எனக் கூறும் ட்விட்டர்வாசிகள், எம்.பி செந்தில்குமார் நிதானமாக பதில் அளித்திருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுவதாக புகழ்ந்துள்ளனர்.