திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் கத்தியைக் காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத 3 பேர் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் அச்சமடைந்த நிலையில், சில பயணிகள், அவர்களிடம் இருந்து போராடி கத்தியை பறித்து தர்ம அடி கொடுத்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் அமர வைத்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எதுவும் உள்ளதா என்று விசாரணை செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.