தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு வேண்டி மாராத்தான் போட்டி

மழைநீர் சேகரிப்பு வேண்டி மாராத்தான் போட்டி

webteam

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுருத்தி நடத்தப்பட்ட மராத்தான் ஓட்டத்தை காவல்துறை துணை காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த மராத்தான் ஓட்டத்தை காவல்துறைதுணை கண்காணிப்பாளர் வேலுமணி கொடியசைத்து துவக்கிவைத்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காவல்நிலைய வீதி, பெரியார் சிலை,பேருந்து நிலையம்,அமராவதி சிலை,பொள்ளாச்சி ரோடு, பூக்கடை கார்னர் என சுமார் 5கிலோமீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. முதலாக வந்த திருப்பூரை சேர்ந்த கண்ணன் 3001 ரூபாய் ரொக்க பரிசையும் கோப்பையையும் பெற்றார். அதேபோல் இரண்டாவதாக வந்த மூணாறை சேர்ந்த தீபக் 2001 ரொக்கபரிசு மற்றும் கோப்பையையும் மூன்றாவதாக வந்த தாராபுரத்தை சேர்ந்த பாலமுரளி 1001ரூபாய் ரொக்கபரிசு மற்றும் கோப்பையை பரிசாக பெற்றனர். 

இவர்களுக்கு சுப்பு சுப்பிரமணியன்,தனசேகரன்,முஸ்தபா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்ததோடு மராத்தானில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மராத்தான் ஓட்டத்தில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தாராபுரம் நீர் மேம்பாடு அமைப்பை சேர்ந்த கருணாகரன்,மைக்ரோ சுரேஷ் உள்ளிடோர் செய்திருந்தனர்.