தமிழ்நாடு

அரிவாள், கத்தி வாங்க வருவோரின் பெயர், முகவரி அவசியம் - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

அரிவாள், கத்தி வாங்க வருவோரின் பெயர், முகவரி அவசியம் - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

JustinDurai
தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு, காவல் துறையினருக்கு வழங்கியுள்ள உத்தரவில், ''ஏற்கனவே 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,110 கத்திகள் கைப்பற்றப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தவறான நபர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்க வேண்டும். அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், வாங்குவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் பொருத்த வேண்டும்'' என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.