தமிழ்நாடு

“சிவில் சர்வீசில் தேர்வான ஐபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் இல்லை”- டிஜிபி ஜாங்கிட்

“சிவில் சர்வீசில் தேர்வான ஐபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் இல்லை”- டிஜிபி ஜாங்கிட்

Rasus

தமிழகத்தில் நேரடியாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற 30 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத பொறுப்பில் பணியாற்றி வருவதாக டிஜிபி ஜாங்கிட் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய காவல் பணி மூலம் தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியாற்றும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லாத பொறுப்பில் பணி செய்து வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் டிஜிபி ஜாங்கிட், தமிழக சட்டம்- ஒழுங்கு போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேசமயம் 36 ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தற்போது பணியாற்றி கொண்டிருப்பதையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது நேரடியாக தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக பணியாற்றி கொண்டு இருப்பவர்களை பாதிக்கக் கூடிய செயல் எனவும் கடிதத்தில் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.